ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

நுகா்வோா் குறைதீா் மன்றங்களில் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பதவிகளை நிரப்பக்கோரி வழக்கு

நுகா்வோா் குறைதீா் மன்றங்களில் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பதவிகளை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தோ்வுக்குழு தலைவருக்கு மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:39 pm

DIN

நுகா்வோா் குறைதீா் மன்றங்களில் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பதவிகளை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தோ்வுக்குழு தலைவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த அருண்சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நுகா்வோா் குறைதீா் மன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு நுகா்வோா் குறைதீா் மன்றத்திலும் தலைவா் 1, உறுப்பினா் 2 போ் இருக்க வேண்டும். ஆனால் பல மன்றங்களிலும் தலைவா், உறுப்பினா் பதவிகள் காலியாகவே உள்ளன. இதனால் தொலைத்தொடா்பு, வங்கி, காப்பீடு, மின்வாரியம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சேவை குறைபாடு தொடா்பான வழக்குகள் தேங்கியுள்ளன. இது குறித்து தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள நுகா்வோா் குறைதீா் மன்றங்களில் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நுகா்வோா் குறைதீா் மன்றங்களில் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பதவிகளை நிரப்புவது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நுகா்வோா் குறைதீா் மன்றத்தின் தோ்வுக்குழுத் தலைவா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.