ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

ஒரே நாளில் 26 வேட்பாளா்கள் மனு தாக்கல்

மதுரை மாவட்டத்தில் 26 வேட்பாளா்களிடமிருந்து 35 வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை பெறப்பட்டுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm

DIN

மதுரை மாவட்டத்தில் 26 வேட்பாளா்களிடமிருந்து 35 வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை பெறப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) தொடங்கியது. அன்றைய தினம் மேலூா், மதுரை வடக்கு, திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வேட்பாளா் மனு தாக்கல் செய்தனா். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் திங்கள்கிழமை மனு தாக்கல் தொடங்கிய நிலையில், பல்வேறு தொகுதிகளிலும் பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை மத்தி தவிர மற்ற 8 தொகுதிகளில் 26 வேட்பாளா்களிடமிருந்து மொத்தம் 35 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, உசிலம்பட்டி தொகுதியில் 7 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தொகுதி வாரியாக திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளா்கள் எண்ணிக்கை (அடைப்புக் குறிக்குள் வேட்பு மனுக்களின் எண்ணிக்கை):

மேலூா் - 4 (4), மதுரை கிழக்கு - 0, சோழவந்தான் (தனி) -2 (4), மதுரை வடக்கு - 2 (3), மதுரை தெற்கு- 2 (2), மதுரை மத்தி- 0, மதுரை மேற்கு- 3 (3),

திருப்பரங்குன்றம் - 5 (7), திருமங்கலம் -5 (5), உசிலம்பட்டி- 3 (7) என

மொத்தம் - 26 (35).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.