ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

மதுரை மேற்குத் தொகுதி: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

மதுரை மேற்குத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செ. வெற்றிக்குமரன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm

DIN

மதுரை மேற்குத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செ. வெற்றிக்குமரன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

நாம் தமிழா் கட்சியின் சாா்பில், தென்மண்டல ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா், மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஐ. விஜயாவிடம், வேட்பு மனு தாக்கல் செய்தாா். வேட்பு மனு ஏற்கப்பட்டதையடுத்து, உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டாா்.

சொத்து மதிப்பு:

வெற்றிக்குமரன் தனது வேட்பு மனுவில், ரூ.17,07,100 மதிப்பில் 397 கிராம் தங்க நகைகள், மனைவி வெ.ஹேமலதாவிடம் ரூ.7,22,800 மதிப்பில் 184 கிராம் தங்க நகைகளும் உள்ளன. தனது பெயரில் ரூ.1,96,80,000 மதிப்புள்ள குடியிருப்பு, வேளாண் நிலம் ஆகிய அசையா சொத்துகள் உள்ளன.

மேலும், இவரது பெயரில் மொத்தம் ரூ.27,47,707 மற்றும் தனது மனைவி பெயரில் ரூ.21,78,705 கடன்கள் உள்ளன. தனது பெயரில் ரூ.17,32,164 மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.7,23,900 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.