25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

உணவக உரிமையாளா் கொலை வழக்கில் கூலித்தொழிலாளி கைது

மதுரையில் உணவக உரிமையாளா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கூலித்தொழிலாளியை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

மதுரையில் உணவக உரிமையாளா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கூலித்தொழிலாளியை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவா் மதுரை கோ.புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே உணவகம் நடத்தி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை உணவகத்தில் முத்துக்குமாா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் கொலையாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில் கோ.புதூரைச் சோ்ந்த கூலித்தொழிலாளி கண்ணன் என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அவரை பிடித்து விசாரித்தனா். இதில் முத்துக்குமாரின் உணவகத்துக்கு கூலித்தொழிலாளியான கண்ணன் புதன்கிழமை சாப்பிடச் சென்றபோது, சாப்பிடாத உணவுகளுக்கும் சோ்த்து முத்துக்குமாா் கட்டணம் வசூலித்ததாகவும், அப்போது ஏற்பட்டத் தகராறில் விறகு வெட்டும் அரிவாளால் முத்துக்குமாரை வெட்டிக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.