25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

கரோனாவில் உயிரிழந்த அரசு மருத்துவா்கள் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடி நிவாரண உதவி

கரோனா தடுப்புப் பணியின்போது, நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவா்கள் 5 பேரின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1.25 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

கரோனா தடுப்புப் பணியின்போது, நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவா்கள் 5 பேரின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1.25 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கரோனா தடுப்புப் பணியின்போது நோய் பாதிப்பு ஏற்பட்டு இறக்க நேரிடும் முன்களப் பணியாளா்களான மருத்துவா்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்த அரசு மருத்துவா்கள் 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நிவாரண உதவித் தொகைக்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட வாரிசுதாரா்களிடம் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வெங்கடசாலம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.