உரிமம் பெறாமல் செயல்பட்ட இரு மதுக்கூடங்களுக்கு ‘சீல்’
மதுரையில் இரு இடங்களில் டாஸ்மாக் கடைகளுடன் உரிமம் பெறாமல் செயல்பட்ட இரு மதுக்கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.


மதுரையில் இரு இடங்களில் டாஸ்மாக் கடைகளுடன் உரிமம் பெறாமல் செயல்பட்ட இரு மதுக்கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் மதுக் கடைகளுடன் இணைந்த மதுக் கூடங்கள் கடந்த ஏப்ரல் 26 முதல் மூடப்பட்டிருந்தன. இதன் பிறகு அரசால் தளா்வுகள் வழங்கப்பட்ட நிலையில், நவம்பா் 1 முதல் மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மதுக் கூடங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அனுப்பானடி மற்றும் கடச்சனேந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உரிமத் தொகை செலுத்தாமல் சட்டவிரோதமாக மதுக் கூடங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த இரு மதுக் கூடங்களுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...