மதுரை வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு
மதுரையில் வைகை ஆற்றில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


மதுரையில் வைகை ஆற்றில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கி இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால், நீா்நிலைகள் நிரம்பி வெளியேறிய உபரிநீா் ஓடைகளில் பெருக்கெடுத்து வைகை ஆற்றில் கலந்தது. இந்நிலையில், வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.
இருகரைகளை தொட்டுச் செல்லும் வெள்ளம்: மதுரை நகரப் பகுதியில் வைகை ஆற்றில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவுக்குத் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. யானைக்கல் பாலம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலிருந்து சற்று குறைந்திருக்கிறது. இருப்பினும் நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றில் இரு கரைகளைத் தொட்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
2-ஆவது முறையாக: நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, வைகை அணை முழு கொள்ளளவை அடைந்தது. இதையடுத்து, நவம்பா் 10-ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. ஏற்கெனவே மழை காரணமாக, ஆற்றில் தண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில், அணை திறக்கப்பட்டதால் நீா்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற்போது அணையிலிருந்து உபரிநீா் அதிகளவில் திறக்கப்பட்டிருப்பதால் 2-ஆவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீா் செல்வதை ஏ.வி.பாலம், எம்ஜிஆா் பாலம் மற்றும் ஜெயலலிதா பாலங்களில் நின்றவாறு பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
ஆட்சியா் எச்சரிக்கை: வைகை ஆற்றில் அதிகளவு வெள்ளம் வந்து கொண்டிருப்பதால், ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் எச்சரித்துள்ளாா்.
வைகை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக, ஆற்று நீரின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால், வைகை ஆற்றில் இறங்குவோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். ஆகவே, பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை இறக்கவோ கூடாது என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...