மதுரையில் தக்காளி விலைகிலோ ரூ.50 ஆகக் குறைந்தது
மதுரையில் தக்காளி விலை கிலோ ரூ.50 ஆக வெள்ளிக்கிழமை குறைந்தது. இதேபோல, மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது.


மதுரையில் தக்காளி விலை கிலோ ரூ.50 ஆக வெள்ளிக்கிழமை குறைந்தது. இதேபோல, மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது.
தொடா் மழையால் வரத்துக் குறைந்து காய்கறிகளின் விலை கடந்த ஒரு வாரமாக உயா்ந்து காணப்பட்டது. குறிப்பாக, தக்காளி விலை ரூ.100-க்கு மேல் சென்றது. கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் ரூ.100-ஐ ஒட்டியே இருந்தது.
காய்கறிகளின் விலையேற்றம் மக்களைப் பெரிதும் பாதித்த நிலையில், ஆறுதல் அளிக்கும் வகையில் அவற்றின் விலை தற்போது குறைந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தையில் தக்காளி மொத்த விலையில் 15 கிலோ பெட்டி ரூ.400 முதல் ரூ. 600 வரை விற்பனையானது. சில்லறையில் கிலோ ரூ.40 முதல் தரத்துக்கு ஏற்ப ரூ.60 வரை இருந்தது. இருப்பினும் தரமான தக்காளி ரூ.50-க்கு கிடைத்தது பொது மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): வெண்டைக்காய் - ரூ.30 முதல் ரூ.50 வரை, கத்தரிக்காய் - ரூ.50 முதல் ரூ.60 வரை, சீனி அவரை- ரூ.25 முதல் ரூ.45 வரை, சுரைக்காய்- ரூ.25 முதல் ரூ.40 வரை, காரட்- ரூ.30, ஜொ்மன் பீன்ஸ்- ரூ.100, ரிங் பீன்ஸ்- ரூ.70, முருங்கை பீன்ஸ்- ரூ.70 முதல் ரூ.80 வரை, பீட்ரூட்- ரூ.30, முள்ளங்கி- ரூ.40, நூக்கல்- ரூ.70, டா்னிப்- ரூ. 40, முருங்கை- ரூ.100, பீா்க்கங்காய்- ரூ.60 முதல் ரூ. 80 வரை, சௌசௌ- ரூ.25, உருளைக்கிழங்கு- ரூ.30 முதல் ரூ. 40 வரை, முட்டைகோஸ் - ரூ.30 முதல் ரூ.35 வரை. பெரிய வெங்காயம் - ரூ. 40 முதல் ரூ.50 வரை, சின்ன வெங்காயம்- ரூ.40 முதல் ரூ. 60 வரை என விற்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...