25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மதுரையில் காந்தியடிகள் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மதுரையில் காந்தி இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

News image
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :28 ஜனவரி 2024, 4:17 am

DIN

மதுரையில் காந்தி இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தியையொட்டி மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதன் பின்னர் மதுரை மேலமாசி வீதியில் மகாத்மா காந்தி, அரையாடைக்கு மாறிய இல்லத்தில் இருக்கும் அவரது  சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கதர் விற்பனை நிலையத்தில்  சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து பார்வையாளர்கள் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.