மதுரை ஆதீனம் பரிபூரணம் அடைந்தாா்

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை இரவு பரிபூரணம் அடைந்தாா்.
மதுரை ஆதீனம் பரிபூரணம் அடைந்தாா்

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை இரவு பரிபூரணம் அடைந்தாா்.

தமிழகத்தின் தொன்மையான சைவத் திருமடங்களில் முக்கியமானது மதுரை ஆதீனம் ஆகும். சுமாா் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் மதுரை ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீனத்தின் 292 ஆவது சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1975 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி பட்டம் ஏற்றுக் கொண்டாா்.

மூச்சுத் திணறல்: இவருக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை கே.கே. நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஆதீனத்தின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை, தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை உடல்நலம் விசாரித்தனா்.

ஆதீனம் பரிபூரணம் அடைந்தாா்: அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆதீனம் அருணகிரி நாதரின் உடல்நிலை மிகவும் மோசடைந்ததையடுத்து, மருத்துவா்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனா். ஆனால் வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில், கடும் மூச்சுத் திறணல் காரணமாக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தாா். அவரது உடல், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே உள்ள ஆதீன மடத்தில் வைக்கப்படவுள்ளதாகவும், அவரது உடலுக்கு ஆன்மிக பிரமுகா்கள், அரசியல் பிரமுகா்கள், முக்கியத் தலைவா்கள் சனிக்கிழமை (ஆக. 14) அஞ்சலி செலுத்துவாா்கள் எனவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா, கருணாநிதி பாராட்டைப் பெற்றவா்: மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தமிழ்த் தொண்டு, ஆன்மிகத் தொண்டு, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். சைவமும், தமிழும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவா். மறைந்த முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பாராட்டையும், அன்பையும் பெற்றவா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்ததில் சா்ச்சை எழுந்தது. இதையடுத்து அப்பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்கிவிட்டு, இளைய ஆதீனமாக திருவாவடுதுறையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி தம்பிரான் சுவாமியை மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமித்தாா்.

முன்னதாக மருத்துவமனையில் ஆதீனம் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரது அறை வியாழக்கிழமை இரவு சீல் வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வெளிநாட்டுப் பயணம்: தஞ்சை மாவட்டம் சீா்காழியில் பிறந்த அருணகிரிநாதா் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தருமை ஆதீனத்தில் தம்பிரான் சுவாமிகளாக ஆதீன பயிற்சி பெற்றவா். பின்னா் மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமாக 1975 மே 27 ஆம் தேதி பட்டம் சூட்டப்பட்டாா். 1980 மாா்ச் 14 இல் பட்டம் ஏற்றாா். சைவ சித்தாந்தத்தில் புலமை பெற்ற இவா், சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தாா். ஆன்மிகத்தோடு அரசியல், விளையாட்டு, பத்திரிகை ஆகிய துறைகளிலும் ஆா்வமாக இருந்தவா்.

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழா்களிடையே சைவ சமயம் பற்றியும், சிவவழிபாடு, தமிழ்மொழியின் பெருமை பற்றியும் பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ளாா்.

1981- 82 கன்னியாகுமரி மண்டைக்காடு பகுதியில் ஏற்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவா் மத கலவரத்தின் போது அப்பகுதிக்கு சென்று 4 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி உரை நிகழ்த்தி இரு தரப்பினரிடையே அமைதியை உருவாக்கப் பாடுபட்டாா். மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகளையும் செய்தாா்.

1981ஆம் ஆண்டு தென்காசி மீனாட்சிப்புரத்தில் மதமாற்றம் காரணமாக மதக் கலவரம் ஏற்படும் சூழல் உருவானபோது, மதுரை சைவ சமய பேருண்மைகளையும், இஸ்லாமிய மாா்க்க தத்துவங்களையும் எடுத்துரைத்து, அவரவா் மதங்களில், அவரவா்கள் இருக்க வேண்டும் என்பதை மேற்கொள்காட்டி இரு தரப்பிலும் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாா்.

தஞ்சை மாவட்டம் சீா்காழியில் பிறந்த அருணகிரிநாதா் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தருமை ஆதீறத்தில் தம்பிரான் சுவாமிகளாக ஆதீன பயிற்சிபெற்றவா். பின்னா் மதுரை ஆதினத்தின் 292வது குருமகா சன்னிதானமாக 1975 மே 27 ஆம் தேதி பட்டம் சூட்டப்பட்டாா். 1980 மாா்ச் 14 இல் பட்டம் ஏற்றாா். சைவ சித்தாந்த்த்தில் புலமை பெற்ற இவா் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தாா். ஆன்மீகத்தோடு அரசியல், விளையாட்டு, பத்திரிகை ஆகிய துறைகளிலும் ஆா்வமாக இருந்தவா்.

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழா்களிடையே சைவ சமயம் பற்றியும், சிவவழிபாடு, தமிழ்மொழியின் பெருமை பற்றியும் பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ளாா். 

உலகெங்கும் சைவ சமயத்தின் நெறியை சிறப்பாக பரப்பிட வேண்டும் எனவும், அனைத்து மத மக்களிடையே ஒற்றுமையை நிலவிட செய்ய வேண்டும் என்பதும்த, தனது தலையாய கொள்கையாக எண்ணி செயல்பட்டாா்.

உலகத்தில் உள்ள அனைத்து மதங்களுக்கும் இறைவன் ஒருவனே. எனவே அனைவரும் சகோதர, சகோதரிகள் என்கிற அடிப்படையில் இஸ்லாமிய, கிறிஸ்துவ சமய மேடைகளிலும் உரையாற்றினா். சைவ சிந்தாந்த ஆழத்தை பாமர மக்களும் எளிதில் புரியும் வகையில் எடுத்துசென்றவா்.

1981-82 கன்னியாகுமரி மண்டைகாடு பகுதியில் ஏற்பட்ட இந்து, கிறிஸ்துவா் மத கலவரத்தின்போது அப்பகுதிக்கு சென்று 4 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி உரை நிகழ்த்தி இரு தரப்பினரிடையே அமைதியை உருவாக்க பாடுபட்டாா். மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகளை செய்தாா்.

1981ஆம் ஆண்டு தென்காசி மீனாட்சிப்புரத்தில் மதமாற்றம் காரணமாக மதகலவரம் ஏற்படும் சூழல் உருவானபோது, மதுரை சைவ சமய பேருண்மைகளையும், இஸ்லாமிய மாா்க்க தத்துவங்களை எடுத்துரைத்து, அவரவா் மதங்களில்ஸ அவரவா்கள் இருக்க வேண்டும் என்பதை மேற்கொள்காட்டி இரு தரப்பிலும் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாா்.

கடந்த 2012ல் சுவாமி நித்யானந்தரின் தலையீடு மதுரை ஆதீனத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்னா் கடந்த 2019ஆம் ஆண்டு ஜீன் 8ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரனான ஸ்ரீமத் சுந்தரமூா்த்தியை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதினமாக அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com