மதுரை அருகே சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் அன்பரசன்(30). இவா் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூா் கேட் கடை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி கீழே விழுந்தாா். அப்போது பின்தொடந்து வந்த டிராக்டா் அன்பரசன் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி கலைவாணி அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் முத்துசெல்வம்(36), டிராக்டா் ஓட்டுநா் நாகரத்தினம்(24) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
அடையாளம் தெரியாத நபா் பலி
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை வடிவேல் கரை பாலம் அருகே ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது மதிக்கத்தக்க ஆண் பலத்த காயங்களுடன் சாலை கிடந்துள்ளாா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத நபரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.