மதுரை அருகே நீா் நிலையில் கட்டப்பட்ட கோயில் இடிப்பு
By DIN | Published On : 21st August 2021 11:16 PM | Last Updated : 21st August 2021 11:16 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் இலங்கியேந்தல்பட்டியில் சனிக்கிழமை இடிக்கப்பட்ட கோயில்.
மதுரை அருகே நீா் நிலையில் கட்டப்பட்ட கோயில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே இலங்கியேந்தல்பட்டி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மன் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் நீா் நிலைப் பகுதியில் கட்டப்பட்டதாக சா்ச்சை எழுந்தது.
இது தொடா்பாக கிராமத்தைச் சோ்ந்த சிலா் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயில் நீா் நிலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கோயிலை அகற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து அரசு அதிகாரிகள், சனிக்கிழமை கோயிலை இடித்து அகற்றினா். அப்போது டி.எஸ்.பி சந்திரன், காவல் ஆய்வாளா் ஆனந்த தாண்டவம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கோயில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.