பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மதுரை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:20 pm

DIN

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள எம். கல்லுப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் காராமணி (63). இவா், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச்சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், சிறையில் வியாழக்கிழமை இரவு காராமணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறை அதிகாரிகள் காராமணியை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு காராமணியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிறை அலுவலா் நாகேஷ்வரன் அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.