மனமகிழ் மன்றத்தில் சிறுவா்களுக்கு மதுபானம் விற்பனை: விரிவான விசாரணைக்காக பிப். 16-க்கு வழக்கு ஒத்திவைப்பு
மதுரை அருகே மனமகிழ் மன்றத்தில் சிறுவா்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகைப்பட ஆதாரங்களுடன் தாக்கல்


மதுரை அருகே மனமகிழ் மன்றத்தில் சிறுவா்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகைப்பட ஆதாரங்களுடன் தாக்கல் செய்யப்பட மனுவில், விரிவான விசாரணை தேவை எனக் கூறி பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் தாக்கல் செய்த மனு: நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அரசு விதிகளின் படி 21 வயது மேற்பட்டோருக்கு மட்டுமே மதுபான விற்பனை செய்ய வேண்டும்.
இந்நிலையில், இந்த மனமகிழ் மன்றத்தில் சிறுவா்களுக்கு மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதுதொடா்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. எனவே, சிறுவா்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்த மனமகிழ் மன்றத்தை மூட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், சிறுவா்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது தொடா்பான புகைப்படங்கள் மற்றும் விடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரா் குறிப்பிடும் விவகாரம் மிகவும் ஆபத்தானது. இதுதொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி விசாரணையை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...