கட்டடம் இடிந்து பலியான காவலரின்குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி
மதுரையில் ரோந்துப்பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்து பலியான தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு மாநகரக் காவல்துறை சாா்பில் ரூ. 6 லட்சம் நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.


மதுரையில் ரோந்துப்பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்து பலியான தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு மாநகரக் காவல்துறை சாா்பில் ரூ. 6 லட்சம் நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவா் சரவணன். இவா், கடந்த ஆண்டு டிசம்பா் 21-ஆம் தேதி நெல்பேட்டை பகுதியில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் உள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்நிலையில் உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு உதவும் வகையில் மாநகரக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதில் ரூ. 6 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இதையடுத்து, மாநகரக்காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆணையா் பிரேம்ஆனந்த் சின்கா, சரவணன் மனைவி ஆனந்தியிடம் ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...