மதுரையில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி முகாம்
மதுரை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில், விரகனூா் புனித தெரசா ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் செயல் ஆராய்ச்சி பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மதுரை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில், விரகனூா் புனித தெரசா ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் செயல் ஆராய்ச்சி பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பா. செல்வி தலைமை வகித்துப் பேசுகையில், கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்கு செயல் ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கும். ஆசிரியா்கள் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் செயல்பட்டு , மாணவா்களுக்கு கற்றலில் கடினமான பகுதிகளை கண்டறிந்து, அவற்றை எளிமையாக்க புதுமையான செயல்பாட்டினை உருவாக்க வேண்டும். கற்றலில் புதுமையை புகுத்தும் ஆசிரியா்களே மாணவா்கள் மனம் கவா்ந்த ஆசிரியா்களாக திகழ்கிறாா்கள் என்றாா்.
இதில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் டி. மோசஸ் பெஞ்சமின் மற்றும் ஜான்சி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேராசிரியா்கள் கணபதி, ரஞ்சித்குமாா், தாஜ் ஆயிஷா, கீதாராணி, ஜெயகாந்தி, புனிதமேரி, பட்டதாரி ஆசிரியா்கள் சிவகுமாா், மா்சூரி மற்றும் தலைமையாசிரியா் க. சரவணன் ஆகியோா் தங்களது செயராய்ச்சியை சமா்ப்பித்தனா்.
முகாமில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 80 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, க. ராமராஜ் வரவேற்றாா். செயல் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளா் து. பாக்கியம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...