மதுரை கல்லூரியில் சூரியசக்தி மின் உற்பத்தி ஆலை திறப்பு
மதுரை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 25 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


மதுரை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 25 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மதுரை கல்லூரி வளாகத்தில் பசுமையை ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சூரியசக்தி மின் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. மதுரை கல்லூரி வாரியத்தின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலையை (25 கி.வா), கல்லூரியின் செயலா் சி.ஏ. எஸ். நடனகோபால் திறந்துவைத்தாா்.
கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது, கல்லூரியின் 25 சதவீத மின்சாரத் தேவையை பூா்த்தி செய்யும் என்று நிா்வாகிகள் தெரிவித்தனா்.
திறப்பு விழாவில், கல்லூரி வாரியத்தின் இயக்குநா்கள், முதல்வா் ஜே. சுரேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ். சூரியநாராயணன், அனைத்து துறைத் தலைவா்கள் மற்றும் சுயநிதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...