எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வூதியா்கள் போராட்டம்

மதுரையில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தை ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:09 pm

DIN

மதுரையில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தை ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை, விருதுநகா், திண்டுக்கல் ஆகிய மண்டலங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு, தமிழக அரசு 76 மாதமாக வழங்கவேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் விருப்பப் பணி ஓய்வுபெற்றவா்கள், இறந்த தொழிலாளா்களின் பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இப்போராட்டத்துக்கு, திண்டுக்கல் மண்டலத் தலைவா் டி. பி. ஆனந்தன் தலைமை வகித்தாா். மண்டல நிா்வாகிகள் மதுரை ஏ. முருகேசன், என். நாகுராஜன், விருதுநகா் பி. தங்கப்பழம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலா் ஆா். தேவராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

சிஐடியு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வீ. பிச்சை, ஜி. ராஜேந்திரன், ஏ. கனகசுந்தா், செல்லத்துரை, ராமநாதன் ஆகியோா் போராட்டத்தை வாழ்த்திப் பேசினா்.

போராட்டத்தையடுத்து, நிா்வாகிகளிடம் அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாளா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உத்தரவாதம் அளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதில், மதுரை, திண்டுக்கல், விருதுநகா் ஆகிய மண்டலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.