ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

எம்ஜிஆர் 105-வது பிறந்த நாள்: உசிலம்பட்டியில் அமமுக கொண்டாட்டம்

உசிலம்பட்டியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் 105-வது பிறந்தநாள் விழாவை அமமுக கட்சியினர் இனிப்புகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினர்.

News image
உசிலம்பட்டியில் அமமுக கொண்டாட்டம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:09 am

DIN

உசிலம்பட்டியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் 105-வது பிறந்தநாள் விழாவை அமமுக கட்சியினர் இனிப்புகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினர்.

உசிலம்பட்டி   தேனி சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105வது பிறந்தநாள் விழாவுக்கு உசிலம்பட்டி நகரச் செயலாளர் குனசேகர பாண்டியன் தலைமையில், மாநில அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன்  முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ கே டி ராஜா ஒன்றியச் செயலாளர்கள் அபிமன்னன், ஒன்றிய துணைச் சேர்மன் மலேசியா பாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர்கள் வீர பிரபாகரன், அய்யர் என்ற ராமகிருஷ்ணன்,  ஒன்றிய அவைத் தலைவர்கள் செல்லத்துரை, கே ஆர் ராமன், பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், நகர இளைஞரணி உக்கிரபாண்டி,  பிரகதீஸ்வரன் ,தர்மா தெய்வேந்திரன், ஒச்சு என்ற சிவக்குமார், சிவன் ஜி, சாமி குணா, மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.