யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா ஜூலை 29-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மீனாட்சியம்மனுக்கு மட்டுமே நடைபெறும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா ஜூலை 29-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:17 pm

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மீனாட்சியம்மனுக்கு மட்டுமே நடைபெறும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா ஜூலை 29-ஆம் தேதி தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும், ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மாா்கழி எண்ணெய் காப்பு உற்சவம் ஆகியவை மீனாட்சியம்மனுக்கு மட்டுமே பிரத்யேகமாக நடைபெறும் விழாக்களாகும்.

இந்நிலையில் விவசாயம் வளம்பெறும் வகையிலும், நாடு செழிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா ஜூலை 29-இல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

திருவிழாவின்போது மீனாட்சியம்மன் பஞ்சமூா்த்திகளுடன் தினசரி காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறாா். ஏழாம் நாளன்று இரவு திருவீதியுலா முடிந்த பின்னா் உற்சவா் சன்னிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைவபம் நடைபெறும்.

இதையொட்டி ஆடி முளைக்கொட்டு உற்சவம் நடைபெறும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 8 வரை 10 நாள்கள் மீனாட்சியம்மன் கோயில் சாா்பிலோ உபயதாரா் சாா்பிலோ தங்க ரத உலா, திருக்கல்யாண நிகழ்வுகளைப் பதிவு செய்ய இயலாது என்று துணை ஆணையா் ஆ.அருணாசலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.