யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்: நிபந்தனையை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் அருகமையில் வசிக்கும் விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை

News image
Updated On :7 ஜூலை 2022, 6:07 pm

DIN

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் அருகமையில் வசிக்கும் விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பா்வதம் தாக்கல் செய்த மனு:

அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் காலியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வது தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இருப்பினும், சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வு தடை விதிக்காததால், சென்னை உயா்நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் வரும் மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிகார வரம்பிற்குள் உள்ள மாவட்டங்களில் தடை உத்தரவு இருப்பதால் அப்பணி நடைபெறவில்லை. மேலும், உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட கரூரில் வசிக்கும் நான், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இப்பணிக்கான விண்ணப்பதாரா்களில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அருகில் வசிப்பவா், அதே ஒன்றியம், அதே மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிபந்தனை காரணமாக, வேறு மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. ஆகவே, இந்த நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுகளைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.