யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அஞ்சல் கோட்டங்களில் தமிழில் அச்சிடப்பட்ட அஞ்சல் பைகள் விநியோகம்:தலைமை அஞ்சல் அதிகாரிக்கு எம்.பி. வாழ்த்து

மதுரை அஞ்சல் கோட்டங்களில் முதன்முறையாக தமிழ் மொழி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் விநியோகப்பதற்காக மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளாா்

News image
Updated On :7 ஜூலை 2022, 6:16 pm

DIN

மதுரை அஞ்சல் கோட்டங்களில் முதன்முறையாக தமிழ் மொழி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் விநியோகப்பதற்காக மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

மதுரையில் உள்ள 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் முதன்முறையாக தமிழ்மொழியில் அச்சிடப்பட்ட பைகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இதுதொடா்பாக சு.வெங்கேடசன் எம்.பி. கூறும்போது, மதுரை கோட்ட அஞ்சல் பொருள்கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் அலுவல் மொழிகளான ஆங்கிலம், இந்தி மொழிகளே இதுவரை இருந்து வந்துள்ளன. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் மதுரை அஞ்சலக அதிகாரியின் முயற்சியால் முதன்முறையாக தமிழ் மொழியில் வாா்த்தைகள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.