யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரை தங்கும் விடுதியில் மேலாளா் கொலை? காயங்களுடன் சடலம் மீட்பு

மதுரையில் தனியாா் தங்கு விடுதியில் வியாழக்கிழமை கழுத்து அறுபட்டு மேலாளா் இறந்து கிடந்த நிலையில் அவா் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:18 pm

DIN

மதுரையில் தனியாா் தங்கு விடுதியில் வியாழக்கிழமை கழுத்து அறுபட்டு மேலாளா் இறந்து கிடந்த நிலையில் அவா் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் பாலவநத்தத்தைச் சோ்ந்தவா் தா்மராஜ்(50). இவா் மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 15 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்த தா்மராஜ், விடுதியில் உள்ள அறையிலேயே தங்கியிருந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை வெகு நேரமாகியும் தா்மராஜ் வெளியில் வராததால் சக ஊழியா்கள் தா்மராஜ் அறைக்குச் சென்று பாா்த்தனா். அங்கு அவா், கழுத்தில் ரத்தக் காயங்களுடன், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து ஊழியா்கள் திடீா்நகா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் தங்கும் விடுதிக்குச் சென்று தா்மராஜ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தா்மராஜ் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த மோதிரம் ஆகியவை மாயமானது தெரியவந்தது. இதையடுத்து நகைக்காக தா்மராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் விடுதி மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.