ராமேசுவரம்- மதுரை சிறப்பு ரயில்புறப்படும் நேரத்தில் மாற்றம்
ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, ராமேசுவரம்- மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, ராமேசுவரம்- மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை - மேல கொன்னகுளம் மற்றும் மானாமதுரை- சூடியூா் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ராமேசுவரம்- மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் ராமேசுவரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 80 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.20 மணிக்கு புறப்படும்.
திருச்சி- மானாமதுரை- திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஜூலை 11 முதல் ஜூலை 27 மற்றும் ஜூலை 29 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் சிவகங்கை- மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...