காமராஜா் பல்கலை. தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2022-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை, துணைவேந்தா் ஜெ. குமாா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.


மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2022-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை, துணைவேந்தா் ஜெ. குமாா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம், பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைநிலைக் கல்வி வாரியத்தின் அனுமதியுடன் 24 இளங்கலை படிப்புகள், 23 முதுகலை படிப்புகள், 96 முதுநிலை பட்டயப் படிப்புகள், 42 பட்டயப் படிப்புகள் மற்றும் 22 சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
தகுதியான ஆசிரியா்கள், தரமான ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் தொலைநிலைக் கல்வி வாரிய விதிமுறைகளைப் பின்பற்றி, மாணவா்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. வகுப்புகள் வார இறுதி நாள்களில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் நடப்பாண்டுக்கான மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜெ. குமாா், மாணவா் சோ்க்கையை தொடக்கிவைத்து மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். இதில், தொலைநிலைக் கல்வி இயக்கக அதிகாரிகள் பங்கேற்றனா்.
இந்த மாணவா் சோ்க்கையானது, காமராஜா் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைநிலைக் கல்வி இயக்ககம் மற்றும் அழகா்கோவில் சாலையில் உள்ள பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்று வருவதாக, பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...