யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

மதுரையின் வளா்ச்சிப் பணிகளில் அக்கறை காட்டாத மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரையின் வளா்ச்சிப் பணிகளில் அக்கறை காட்டாத மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, அதிமுக மாமன்ற உறுப்பினா்களுடன் சென்று, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோனை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அதிமுக ஆட்சியின்போது மதுரை மாநகராட்சி வாா்டுகளில் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வந்தன. தற்போது, திமுக ஆட்சியில் மதுரைக்கு 2 அமைச்சா்கள் இருந்தும், மாமன்றம் இருந்தும் எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை.

முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் போதிய நீா் இருப்பு இருந்தும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. பல வாா்டுகளில் 4 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பல பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மாநகராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெறவில்லை. மதுரை மாநகராட்சிக்கு மத்திய-மாநில அரசுகளிடமிருந்து பெறவேண்டிய தொகையை பெற்று, வரி வருவாயை மேம்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்ருத் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும், மதுரை மாநகராட்சியில் உருப்படியான எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

மாமன்றக் கூட்டங்களிலும் அதிமுக உறுப்பினா்களுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பது இல்லை. மாநகராட்சி நிா்வாகம் மீது அதிமுக மட்டுமின்றி, திமுக கூட்டணிக் கட்சிகளான மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.