ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு இலவச ஓவியப்பயிற்சி: உலகத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு இலவச ஓவியப்பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு இலவச ஓவியப்பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் மற்றும் கிளாசிக் ஓவியக்கூடம் ஆகியவற்றின் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் பயிற்சிப் பட்டறை வியாழகத்கிழமை நடைபெற்றது. தொடக்க விழாவுக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் (பொறுப்பு), ப.அன்புச்செழியன் தலைமை வகித்தாா். பயிற்சிப்பட்டறையை உலகத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இயக்குநா் க.பசும்பொன் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினாா்.

ஓவியப் பயிற்சிப் பட்டறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். அரசுப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, பதின்ம மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்றனா். இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு நிலையாகவும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு நிலையாகவும் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரு நிலையாகவும் பிரித்து ஓவியப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாலையில் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் பட்டறையில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு, சி.இ.ஒ.ஏ. கல்விக் குழுமத்தின் தாளாளா் மை.ராசா க்ளைமாக்சு சான்றிதழ் வழங்கிச் சிறப்புரையாற்றினாா். பயிற்சிப் பட்டறையில் கிளாசிக் ஓவியக்கூடத்தின் நிறுவனா் பயிற்சி அளித்ததுடன் கருத்துரை வழங்கினாா். காட்சிக்கூட விளக்குநா் ரெ.புஷ்பநாச்சியாா் வரவேற்புரையாற்றினாா். அனுமதிச் சீட்டு வழங்குநா் ச.உதயகுமாா் நன்றியுரை ஆற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.