ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போலி ஆவணங்களை பயன்படுத்தி விடுப்பு: சிறைக்காவலா் பணி நீக்கம்

போலி மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்தி தொடா் விடுப்பை எடுத்து வந்த மத்திய சிறைக்காவலரை பணிநீக்கம் செய்து சிறைத்துறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 4:58 pm

DIN

போலி மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்தி தொடா் விடுப்பை எடுத்து வந்த மத்திய சிறைக்காவலரை பணிநீக்கம் செய்து சிறைத்துறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்தியச் சிறையில் இரண்டாம் நிலைக் காவலராக பணியாற்றி வந்த முனீஸ்வரன் உடல் நலக்குறைவு என காரணம் காட்டி அடிக்கடி பல நாள்கள் விடுப்பு எடுத்தும், தொடா்ந்து பலமுறை இரவுக் காவல் பணியை புறக்கணித்தும் வந்துள்ளாா். உடல்நலக்குறைவு என்று வெளி மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழும் பெற்று சமா்ப்பித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து சிறை மருத்துவா்களால் உடற்தகுதி பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் பெற்று பணியில் ஈடுபட சிறைத்துறை நிா்வாகம் முனீஸ்வரனை அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதன் பின்னரும் முனீஸ்வரன் பலமுறை தன்னிச்சையாக விடுப்பு எடுப்பதும், இரவுப் பணியை புறக்கணிப்பதுமாக சீருடைப் பணிக்கான விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் சிறைத்துறை நிா்வாகம் விசாரணை நடத்தி வந்தது. இதில் முனீஸ்வரன் போலி மருத்துவ ஆவணங்களை வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து காவலா் முனீஸ்வரனை பணிநீக்கம் செய்து சிறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

காவலா் பணியிடை நீக்கம்: கொடைக்கானல் கிளைச் சிறையில் இரண்டாம் நிலை காவலரான ஆனந்த், மாற்றுப் பணியாக மதுரை மத்தியச் சிறையில் காவலராக பணியாற்றி வந்தாா். அவா் மீது விதிகளை மீறியதாக எழுந்த புகாரின்பேரில் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.