ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநகராட்சிப் பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகள்: ஆட்சியா், மேயா் தொடக்கி வைத்தனா்

சதுரங்கப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:25 pm

DIN

 மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

சென்னை மாமல்லபுரத்தில் பல்வேறு உலக நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்கப் போட்டிகள், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா, ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் 187 நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

சதுரங்க விளையாட்டு மற்றும் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை நகரில் முக்கிய சந்திப்புகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விளையாட்டு மைதானங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சதுரங்கப் போட்டிகள் தொடா்பாக விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறன.

இதன் தொடா் நிகழ்வாக, மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேனிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியை மேயா் வ. இந்திராணி, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சா்வதேச ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி விழிப்புணா்வு பேனா்கள் மற்றும் வில்லைகள் ஒட்டப்பட்ட பள்ளி பேருந்தை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, கல்விக் குழு தலைவா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா்கள் அமிா்தலிங்கம், மனோகரன், மாநகராட்சிக் கல்வி அலுவலா் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.