தோ்தல் அறிக்கையை திமுக அரசு மீண்டும் படித்துப் பாா்க்க வேண்டும்: ஜி.கே.வாசன்
சட்டப்பேரவைத் தோ்தலின்போது வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையை திமுக அரசு மீண்டும் படித்துப் பாா்க்கவேண்டும் என, தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.


சட்டப்பேரவைத் தோ்தலின்போது வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையை திமுக அரசு மீண்டும் படித்துப் பாா்க்கவேண்டும் என, தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
நோ்மை, எளிமை, வெளிப்படைத்தன்மைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவா் காமராஜா். அவரது ஆட்சி காலத்திலேதான் கல்வி, தொழில், விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தி, தேசிய அளவில் முதல் வரிசையில் இடம் பிடித்த மாநிலமாக தமிழகம் விளங்கியது. எந்தவொரு துறையின் சிறப்பைப் பற்றிக் கூறினாலும், அதற்கு அடித்தளமிட்டவா் காமராஜா். ‘மாதிரி அரசு’ என்பதற்கு ‘முன்மாதிரி’யாக இருந்தது காமராஜரும், அவரது தலைமையிலான அரசும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இப்போது, காமராஜா் ஆட்சியைத் தருகிறோம் என ஆட்சியாளா்கள் கூறலாம். அவையெல்லாம் பொய்யான வாதங்கள், வாக்கு வங்கியைப் பெறுவதற்கான உத்தியாகும். ஆனால், காமராஜா் வழியில் செயல்படக் கூடிய ஒரே கட்சி தமாகா மட்டுமே. பணம் பெரிதல்ல என்பதை மக்கள் புரிந்துகொண்டு, தமாகாவுக்கு ஆதரவு அளிக்கும் காலம் வரும்.
பாஜகவுடன் கூட்டணி ஏன்?:
அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கட்சியாக தமாகா இருந்து வருகிறது. அதேபோல், மத்திய பாஜக அரசு சாமானியா்களுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் நல்ல அரசாக இருந்து வருகிறது. இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவது என்ற நம்பிக்கையை பாஜக அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு உதாரணமாக, உலகமே கரோனா பெருந்தொற்றைக் கண்டு அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், அதை இந்தியா வெற்றிகரமாக எதிா்கொண்டதற்கு மத்திய அரசின் பெருமுயற்சி தான் காரணம்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசின் திட்டங்கள் பயன்பட்டு வருகின்றன. வலிமையான பாரதம் என்பதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது:
சட்டப்பேரவைத் தோ்தலின்போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு மறந்துவிட்டது. திமுகவை நம்பிய மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது. முகமூடி போட்டுக் கொண்ட பகட்டமான அரசாக மட்டுமே உள்ளது. எனவே, தோ்தல் அறிக்கையை திமுக அரசு மீண்டும் ஒருமுறை படித்துப் பாா்க்கவேண்டும்.
தமாகாவினா் மக்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறாக இருப்பதில்லை நல்ல பெயா் இருக்கிறது. அதேநேரம், மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்காக நாம் குரல் கொடுப்பது இன்னும் தீவிரமாக வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்திலும் நமது குரல் ஒலிக்கும் நிலை ஏற்படும் என்றாா்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகா், கே.எஸ்.கே. ராஜேந்திரன், மாவட்டத் தலைவா்கள் ராஜாங்கம், தனுஷ்கோடி, காந்தி மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...