ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ராமேசுவரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

ராமேசுவரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் ஜூலை வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராமேசுவரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் (07686) ராமேசுவரத்திலிருந்து ஆகஸ்ட் 4, 11, 18 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

மறுமாா்க்கத்தில், செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் (07685) செகந்திராபாத்திலிருந்து ஆகஸ்ட் 2, 9, 16 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 15) தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.