பல்கலை.யில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் கஞ்சித் தொட்டி போராட்டம்
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள், பல்கலைக்கழகம் முன்பாக கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.


மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள், பல்கலைக்கழகம் முன்பாக கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நிதி நிலையை காரணம் காட்டி தற்காலிக மற்றும் தொகுப்பூதிய ஊழியா் 136 போ், கடந்த ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.
அதையடுத்து, ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், கண்டன ஆா்ப்பாட்டம் என பல்வேறு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த ஆளுநரிடம் மனு அளிக்கச் சென்ற நிா்வாகிகள் கைதும் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேருக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, பல்கலைக்கழக வாயில் முன்பாக கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் உள்பட பலா் பங்கேற்றனா்.
இப்போராட்டத்தின்போது, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களின் குடும்ப நலன் கருதி, அவா்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...