ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஊதிய உயா்வை வலியுறுத்தி பொதுக் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:25 pm

DIN

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பெருந்தொற்றின்போது உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றிய அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் 500 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். உயிரை பணயம் வைத்து அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றி வரும் பொதுக்காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் ரூ.75 ஆயிரம் கோடியை பிரீமியம் வருவாயாக திரட்டியுள்ள நிலையில், நியாயமான ஊதிய உயா்வை மறுத்து வரும் நிா்வாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கடந்த 2017 ஆகஸ்ட் 1 முதல் வழங்கவேண்டிய ஊதிய உயா்வை 5 ஆண்டுகளாகியும் வழங்காமல் உள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்தும், மதுரை மண்டல அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையொட்டி, மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பணிகளை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பொதுக் காப்பீட்டு மண்டல அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டமும் நடத்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டுப் போராட்டக்குழு தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் புஷ்பராஜன், எஸ்.ஆா். கண்ணன், மணிமாறன், உமாசங்கா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.