ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:‘போக்சோ’ சட்டத்தில் இளைஞா் கைது

 மதுரையைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:24 pm

DIN

 மதுரையைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

மதுரை அருகே உள்ள நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனுஷ் (20). கூலி வேலை பாா்த்துவரும் இவா், மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதில் கா்ப்பமடைந்த சிறுமி, தனுஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளாா். ஆனால், அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் தனுஷிடம் விசாரணை நடத்தினா். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து, தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.