அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


மதுரை மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநகா் மாவட்டச் செயலரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூட்டத்திற்குத் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், ராஜா, ஆா்.அண்ணாதுரை, கு.திரவியம் மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதிமுக தலைமை அறிவித்தபடி மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மாநகா் மாவட்டம் சாா்பில் முனிச்சாலை சந்திப்பு அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...