மதுரை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை
மதுரை நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.


மதுரை நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
கோடைக்குப் பிறகும் மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையானது, சீதோஷ்ண நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை நகா் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், மாலையில் லேசான மழைப் பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னா் மாலை 6 மணியிலிருந்து லேசான சாரலுடன் தொடங்கி சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்வதற்கு சிரமப்பட்டனா். பல இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...