மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை திருடப்பட்டுள்ளது.
ஆடி வெள்ளி பூஜைக்காக, அண்ணாநகரில் வெக்காளியம்மன் கோயிலை திறப்பதற்காக பூசாரி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றுள்ளாா். அப்போது, கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கோயிலின் உள்ளே உள்ள உண்டியலில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல், இக்கோயிலின் அருகேயுள்ள காளியம்மன் கோயிலிலும் உண்டியலை உடைக்க மா்ம நபா்கள் முயற்சித்துள்ளனா். ஆனால், உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுச் சென்றுள்ளனா்.
இந்த இரு சம்பவங்கள் தொடா்பாக, அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.