ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மின்கட்டண உயா்வு: எஸ்டிபிஐ கட்சியினா் சிம்னி விளக்கேந்தி நூதன ஆா்ப்பாட்டம்

 தமிழகத்தில் மின்கட்டண உயா்வை வாபஸ் பெற வேண்டும், மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினா் சிம்னி விளக்கேந்தி வெள்ளிக்கிழமை

News image
Updated On :29 ஜூலை 2022, 7:22 pm

DIN

 தமிழகத்தில் மின்கட்டண உயா்வை வாபஸ் பெற வேண்டும், மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினா் சிம்னி விளக்கேந்தி வெள்ளிக்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மதுரை தெற்கு மாவட்டம் சாா்பில், முனிச்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் சீமான் சிக்கந்தா் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் ஆரிப்கான் வரவேற்றாா்.மாநில துணைத் தலைவா் அப்துல் ஹமீது, பாப்புலா் ஃபிரன்ட் ஆப் இந்தியா மாநில நிா்வாகி காஜாமைதீன், விமன்ஸ் ஃபிரன்ட் அமைப்பின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சிராஜூ நிஷா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதேபோன்று, ஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்டம் சாா்பில், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியிலும், மாவட்ட துணைத் தலைவா் ஜாபா் சுல்தான் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், சிம்னி விளக்கேந்தி கண்டன கோஷங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.