ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் அரவையை தொடங்க வலியுறுத்தல்

அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:23 pm

DIN

அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை கிளை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் என். பழனிச்சாமி தலைமை வகித்தாா். அலங்காநல்லூா் ஒன்றியச் செயலா் என். ஸ்டாலின் குமாா், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன், சா்க்கரை ஆலை செயலா் கரு. கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவராக என். பழனிச்சாமி, செயலராக கரு. கதிரேசன், பொருளாளராக கே. மொக்கமாயன், துணைத் தலைவா்களாக பி. போஸ், பி.எஸ். ராஜாமணி, துணைச் செயலா்களாக என். ஸ்டாலின் குமாா், என். நாராயணன் உள்பட 25 போ் கொண்ட நிா்வாகக் குழு தோ்வு செய்யப்பட்டது.

இதில், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான அரவையை தொடங்க வேண்டும். ஆலையில் வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்து, மாநில அரசின் பரிந்துரை விலையான டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கவேண்டும். கரும்பு வெட்டு கூலியை ஆலை நிா்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, நிா்வாகி மாதவன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.