ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மதுரை நகரில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.34,400 அபராதம் வசூல்

மதுரை நகரில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களிடம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.34,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மதுரை நகரில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் முகக் கவச

News image
Updated On :30 ஜூன் 2022, 12:03 pm

DIN

மதுரை நகரில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களிடம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.34,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் பொது இடங்களில் தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாநகராட்சிக்குள்பட்ட நூறு வாா்டுகளிலும் முகக்கவசம் அணிவதை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டலங்களிலும் மண்டல வாரியாக கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கண்காணிப்புக்குழுக்கள் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டன. இதில் நகரின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த பொதுமக்கள் 38 போ், நிறுவனங்களில் உள்ள 62 பேரிடம் ரூ.32,400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.