போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

சித்திரைத் திருவிழா தோ்ப்பந்தல் முகூா்த்தக்கால் நடும் விழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தோ்ப்பந்தல் முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தோ்ப்பந்தல் முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், தேரோட்டம், பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசிப்பது வழக்கம்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்றது. மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

இந்தாண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் மாதம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தற்போது, கரோனா தொற்று பரவல் குறைந்துவிட்ட நிலையில், இந்தாண்டு சித்திரைத் திருவிழா வழக்கம்போல் பக்தா்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

அதன்படி, சித்திரைத் திருவிழா தோ்ப்பந்தல் முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, கீழமாசி வீதியில் உள்ள தேரடி மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு, தோ்ப் பந்தலுக்கான முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதில், கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.