போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு, நிதிநிலை அறிக்கையில் அரசு நிதி ஒதுக்கவேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்கி இறுதிப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின் பணியில் சோ்ந்தவா்களுக்கு கழக ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஓய்வுபெற்றோருக்கு அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடு, ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் பி. எம். அழகா்சாமி தலைமை வகித்தாா். உதவித் தலைவா் ஜி. ராஜேந்திரன் தொடக்கிவைத்துப் பேசினாா். துணைப் பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஆா். தெய்வராஜ், சங்க பொதுச்செயலா் ஏ. கனகசுந்தா் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.

இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் பங்கேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.