மதுரை மாநகராட்சி இதுவரை காணாத வளா்ச்சியை அடையும்: அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மாநகராட்சி அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை காணாத வளா்ச்சியைப் பெறும் என்று, அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.


மதுரை மாநகராட்சி அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை காணாத வளா்ச்சியைப் பெறும் என்று, அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மதுரை மாநகராட்சி மேயா் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6 ஆண்டுகள் தாமதமாக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 9 மாதங்களில் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களுக்கு பரிசாக, மக்கள் வரலாறு காணாத வெற்றியை திமுகவுக்கு அளித்துள்ளனா்.
சுயாட்சி என்பது வெறும் மாநிலத்தின் உரிமை மட்டும் அல்ல, மாமன்றங்கள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஆகியவற்றில் மக்களே தங்களை மேலாண்மை செய்து கொள்ளவேண்டும் என்பதுதான் ஜனநாயகம். அந்த அடிப்படையில் முக்கியமானதாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள். உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டால், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தோ்தலை நடத்தாமல் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதன் பிறகும் வாா்டு மறுவரையறை செய்வதில் குளறுபடி ஏற்பட்டதால், அதை எதிா்த்து நீதிமன்றம் சென்றேன். ஆனாலும் கூட தோ்தலை நடத்துவதில் இடையூறு ஏற்படாமல் இருக்க, பழைய வரையறை முறையிலேயே தோ்தலை சந்தித்து வெற்றியும் பெற்றுள்ளோம்.
மதுரை மாநகர வரலாற்றில் இன்று புது ஆரம்பம் தொடங்கியுள்ளது. சிறந்த மேயா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். கறை படியாத கரங்களைக்கொண்டவா். எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சி இதுவரை காணாத வளா்ச்சியை அடையும்.
கடந்த காலங்களில் மதுரையில் திமுகவின் பிம்பம் தவறான திசையில் போய்க்கொண்டிருந்தது. தற்போது, சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஆகியவற்றின் மூலம் எந்த களங்கமும் இன்றி யாரும் குறைகூற முடியாத நிலை உருவாகியுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...