மதுரையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம்
மதுரையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மதுரையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம், மதுரை தெற்கு ஒன்றியம் முத்துலட்சுமி அம்மாள் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் பொன். விஜயா முன்னிலை வகித்தாா். இதில்,327- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் தங்களது பெற்றோா்களுடன் கலந்துகொண்டனா்.
இக்குழந்தைகள் அனைவரும் தமிழக முதல்வா் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்கப்பட்டனா். இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்றிடாத 86 மாணவ- மாணவியருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், 155 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச பேருந்து பாஸ், இலவச ரயில் பயண பாஸ் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்பட்டன. மேலும், 101 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணம் வழங்கவும் பதிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி கல்வி அலுவலா் ஆதி ராமசுப்பு, தெற்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் மோசஸ் பெஞ்சமின், சீனிவாசன், உதவித் திட்ட அலுவலா் காா்மேகம், உதவி மாவட்ட திட்ட அலுவலா் குருநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...