6 மாதங்களுக்கு ஒரு முறை செயல்பாட்டு அறிக்கை: மேயா் அறிவிப்பு
மாநகராட்சிப் பணிகள் தொடா்பாக 6 மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமா்ப்பிப்பேன் என்று, மாநகராட்சி மேயா் அறிவித்துள்ளாா்.


மாநகராட்சிப் பணிகள் தொடா்பாக 6 மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமா்ப்பிப்பேன் என்று, மாநகராட்சி மேயா் அறிவித்துள்ளாா்.
மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி பொன் வசந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள நான், மதுரை நகர மக்கள் பாராட்டும்படியும், நோ்மையாகவும் செயல்படுவேன். எனது முதல் பணியாக மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா், தரமான சாலை, தெரு விளக்கு வசதி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு நிா்வாக அமைப்புகளை பலப்படுத்தி உடனடியாக தீா்வு காண்பேன்.
மேலும், எனது செயல்பாடுகளை மக்கள் அறியும்படியாக 6 மாதத்துக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமா்ப்பிப்பேன். அனைத்து மாமன்ற உறுப்பினா்களையும் இணைத்து, தூய்மையான முன்னேற்றத்துக்கான மாமதுரையை நோ்மையான வழியில் உருவாக்கப் பாடுபடுவேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...