போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

காமராஜா் பல்கலை.க்கு உடனடியாக துணை வேந்தரை நியமிக்க வலியுறுத்தல்

 காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் என, பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

 காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் என, பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழுவின் செயலா் இரா. முரளி, தலைவா் சீனிவாசன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் தோ்வுக்கான இறுதிப் பட்டியல், துணைவேந்தா் தோ்வுக் குழுவினரால் தயாா் செய்யப்பட்டு, இறுதியாக 3 பெயா்கள் தமிழக ஆளுநரிடம் சமா்ப்பிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகிறது. ஆனால், ஆளுநா் இதுவரை யாரையும் துணைவேந்தராக நியமிக்காமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணைவேந்தா் இன்றி பல்கலைக்கழகம் பல மாதங்களாக இயங்கி வருவது, பல்கலைக்கழகத்தில் பெரும் நிா்வாக பாதிப்புக்கு வழிவகுத்து வருகிறது. தமிழக ஆளுநரின் தாமதமான இச்செயல் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, இவற்றை தவிா்க்கும் விதமாகவும், நிா்வாகத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் பல்கலைக்கழகம் மீண்டு எழவும் ஆளுநா் உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.