போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

வண்டியூா் தெப்பக்குளத்தில் குதித்து தொழிலாளி தற்கொலை

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்குள் வெள்ளிக்கிழமை தொழிலாளி குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்குள் வெள்ளிக்கிழமை தொழிலாளி குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை ஐராவதநல்லூரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கோபிநாத் (32). கூலி தொழிலாளியான இவருக்கு, சக்திபிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். கோபிநாத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், மனைவி சக்திபிரியா கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்த ஏக்கத்தில் இருந்த கோபிநாத், வெள்ளிக்கிழமை காலை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கோபிநாத்தின் சடலத்தை மீட்டனா். இச்சம்பவம் தொடா்பாக தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.