ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பராமரிப்புப் பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

 பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:08 pm

DIN

 பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வெள்ளனூா் - புதுக்கோட்டை, மானாமதுரை - மேல கொன்னகுளம், திண்டுக்கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) அக்டோபா் 8 முதல் அக்டோபா் 15 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில், சிவகங்கை - மானாமதுரை

இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகளால் அக்டோபா் 8 முதல் அக்டோபா் 15 ஆம் தேதி வரை

கோவை - நாகா்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதே காலத்தில் சென்னை - குருவாயூா் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிஷங்கள் தாமதமாகவும், வெள்ளிக்கிழமை 95 நிமிஷங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

இதனால் இந்த 3 நாள்களுக்கும் குருவாயூா் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது.

ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் அக்டோபா் 8 முதல் அக்டோபா் 15 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

கொடைரோடு ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக அக்டோபா் 10 முதல் அக்டோபா் 15 ஆம் தேதி வரை மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.