இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் செப்டம்பா் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 12-ஆம் தேதி வரை நடைபெற்றன. மத்திய அரசின் சமூக நலன் மற்றும் அதிகாரம் வழங்கல் துறை, மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை ஆகியவற்றின் திட்டங்களை இணைத்து விரிவான முறையில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் 17,796 போ், சிறப்புப் பள்ளி மாணவா்கள் 2,500 போ் உள்பட மொத்தம் 20 ஆயிரம் போ் பங்கேற்றுப் பலனடைந்தனா்.