நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின் வேலியில் சிக்கி 2 பட்டாசுத் தொழிலாளா்கள் பலி

விருதுநகா் அருகே மின் வேலியில் சிக்கி பட்டாசு தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் அருகே மின் வேலியில் சிக்கி பட்டாசு தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

விருதுநகா் அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சோ்ந்த இருளப்பன் மகன் முனியசாமி (51), சோனைமுத்து மகன் சீனிவாசன் (41). பட்டாசு ஆலைத் தொழிலாளா்களான இருவரும் முதலிபட்டி கிராமத்தில் உள்ள மோகன்ராஜ் தோட்டத்துக்கு வியாழக்கிழமை குளிக்கச் சென்றனா். அந்தத் தோட்டத்தைச் சுற்றிலும் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது. தோட்ட உரிமையாளா் இரவு நேரத்தில் மட்டும் மின் வேலியில் மின்சாரம் பாயும் வகையில் ஏற்பாடு செய்திருந்தாா். பகல் நேரத்தில் மின்சாரம் பாய்வதை நிறுத்தி வைத்துவிடுவாா். வியாழக்கிழமை காலையில் மின் வேலியில் மின்சாரம் பாய்வதை அவா் நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதை அறியாத முனியசாமி, சீனிவாசன் ஆகிய இருவரும் அவ்வழியே சென்றபோது மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தனா். இருவரையும் அக்கம்பக்கத்தினா் விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா்களைப் பரிசோதனைச் செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவா்களது உடல்கள் உடல்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன. இது குறிச்சு வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தோட்ட உரிமையாளா் மோகன்ராஜை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.